Monday, March 26, 2012

கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின...


தன்னில் பயணித்த நீரோடைகளின்
தடயங்களோடிருந்த மணல்பரப்பில்
திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார்
சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான்
பாவிகளை ரட்சித்து
பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன்
என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட
தேர்ந்த மேய்ப்பாளனானேன்
அப்பங்களை சகலருக்கும் பகிர்ந்து
தொடுதலில் சுகப்படுத்தும்
சிகிச்சை நிபுணன்தான்
மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன்
எனது ஜனன நாளில் அவதரித்து
என்பொருட்டு பலியான சிசுக்களுக்காகவென்றார்
மேலிருந்து உதிரத் துவங்கின கொன்றை பூக்கள்...
நன்றி: திண்ணை

1 comment:

குறிஞ்சிமைந்தன் said...

நம்மவர்களை ரட்சிக்க வந்த அந்த தேவ குமாரன் கதை நல்லா இருக்கிறது. உண்மையில் நாம் தான் அந்த தேவ குமாரனை ரட்சிக்கும் படி ஆகிவிட்டது இந்த உலக மக்களிடத்தில். கவிதை புடிச்சி இருக்கிறது. அன்புடன் குறிஞ்சிமைந்தன்.

Post a Comment